உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ரூ.36.3 கோடி சொத்து மற்றும் வங்கிக் கணக்கை முடக்கிய அமலாக்கத்துறை!

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரூ.1 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.



சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

சென்னை தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சட்ட விரோதப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், அந்நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். 

இதேபோல, தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள அறக்கட்டளை நிர்வாகியும், வழக்குரைஞருமான பாபுவுக்கு சொந்தமான எழும்பூர் எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அமலாக்கத் துறையினர் விடுத்த அழைப்பை ஏற்று பாபு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கடந்த 24ஆம் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை ரூ.1 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...