சார்பட்டா 2ஆம் பாகத்திற்கான கதை பணிகள் நடைபெற்று வருகிறது - நடிகர் ஆர்யா தகவல்!

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்யா, சார்பட்டா இரண்டாம் பாகத்திற்கான கதை பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது எனவும் கூறினார்.

கோவை: சார்பட்டா இரண்டாம் பாகத்திற்கான கதை பணிகள் நடைபெற்று வருகிறது என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்பட குழுவினரான ஆர்யா மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் ஆர்யா  பேசியதாவது, மண், நன்றி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை முத்தையா அவர் பாணியில் கூறியிருக்கிறார். இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம். 

படத்தில் வைக்கபட்டுளள "அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு" என்ற வசனம் தொடர்பான கேள்விக்கு தற்போது நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வருகிறது. அதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவை என தான் நினைக்கிறேன். படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும்.

இந்த படத்தில் இடம்பெறும் ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டர் மற்றும் பாட்டு ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு கிராமத்து ஆக்சன் திரைப்படம் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. அதனால் தான் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டு கொண்டதால் தான் இந்த கதை எனக்காக உருவாக்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை இந்த படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பேன் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் போது பல மொழிகளில் மொழி பெயர்க்கிறார்கள், அப்போது அதில் கிடைக்கும் வரைவேற்பை பொறுத்து அது பேன் இந்தியா படமா என முடிவு செய்யப்படுகிறது.

அடுத்து எப்.ஐ. ஆர்  திரைப்படத்தின் இயக்குனருடன் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

சார்பட்டா 2ஆம் பாகம் திரைப்படத்திற்கான கதை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படபிடிப்பு துவங்கும். 

மேலும் இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிதான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சித்தி இத்னானி, இந்த திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கனமான, முக்கியாமன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், சிம்பு, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தது பெருமைக்குரியது எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...