சூலூர் அருகே நீராதார குட்டையை ஆக்கிரமித்துள்ள தனியார் தொழிற்சாலை - பொதுமக்கள் மனு!

சூலூர் அருகே விவசாயத்திற்கு நீர் ஆதராமாக உள்ள குட்டையை தனியார் தொழிற்சாலை ஒன்று ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.



கோவை: சூலூர் அருகே விவசாய நீராதார குட்டையை தனியார் தொழிற்சாலை ஆக்கிரமித்துள்ளதை தடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியில் பாத குட்டை என்ற நீர்பிடிப்பு பகுதி அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த குட்டை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குட்டையில் சேகரமாகும் நீர் இதன் அருகில் உள்ள பெரிய குட்டைக்கு செல்கிறது. 

இந்த இரண்டு குட்டைகளும் ஊத்துப்பாளையம், சங்கோதிபாளையம், கொள்ளுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகளுக்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுபவர்களுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன. இதனிடையே, பாத குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைத்துள்ளதாகவும், சிலர் வீட்டுமனைகளாக மாற்ற முயற்சி மேற்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இந்நிலையில், பாத குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றி குட்டையை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...