கோவையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், கோவை மாநகரில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அதன் தரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.



கோவை: கோவை மாநகரில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வட்டார போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாகனங்களை நேரில் ஆய்வு செய்தனர்.



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்க உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை கூட்டாக ஆய்வு செய்தனர்.



ஆய்விற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கோவை மாநகரில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 230 பள்ளிகளில் இருந்து 1355 பள்ளி வாகனங்கள் இன்று சோதனை செய்யப்படுகிறது.



மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு கண்பரிசோதனையும் செய்யப்படுகிறது. வாகனம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய 17 வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவசர வழி, சிசிடிவி கேமரா, பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ் போன்றவை இருக்கிறதா என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளி வாகனங்கள் இருக்கிறதா என்பதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இதேபோல புறநகர் பகுதிகளிலும் பள்ளி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தபடுகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...