கோவை பில்லூர் குடிநீர் திட்ட பிரதான குழாயில் நீர் கசிவு - சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரம்!

பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முத்துக்கல்லார் பகுதியில் உள்ள இத்திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர்கசிவு ஏற்பட்ட நிலையில், நேற்று அதனை சரி செய்யும் பணிகள் நடப்பதால், சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துக்கல்லார் பகுதியில் உள்ள பில்லூர் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் நீர் கசிவை சரிசெய்யும் பணியின் காரணமாக சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு குடிநீர்‌ வழங்கும்‌ பில்லூர்‌ குடிநீர்‌ திட்டம்‌ ॥-ல்‌ வெள்ளியங்காடு குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌ முதல்‌ ராமகிருஷ்ணாபுரம்‌ மேல்நிலை‌ தொட்டி வரை உள்ள குடிநீர்‌ கொண்டு வரும்‌ பிரதான குழாயில்‌ முத்துக்கல்லார்‌ என்ற இடத்தில்‌ நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனை சரி செய்யும்‌ பணி இன்று (30.05.2023) நடைபெற்று வருவதன் காரணமாக பில்லூர்‌ திட்டம்‌ ॥-ன்‌ மூலம்‌ குடிநீர் விநியோகிக்கப்படும்‌ சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌, கணபதி, காந்திபுரம்‌, புலியகுளம்‌, ரத்தினபுரி, சித்தாபுதூர்‌ மற்றும்‌ உக்கடம்‌ ஆகிய பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது.

பொதுமக்கள்‌ சிரமத்தினை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...