கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத்தினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

கோவையில் சாக்கு வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள், இடைநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து, சங்க கட்டிடத்தின் சாவி மற்றும் காசோலைகளை எடுத்துச் சென்றதாகவும் அதனை மீட்டுத்தர வலியுறுத்தியும் தற்போதைய நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை: கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத்திற்கு விரோதமாக செயல்படும் முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் தற்போதைய நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான், செயலாளர் மதியழகன், பொருளாளர் அபுதாகிர் ஆகியோர் இன்று கோவை மாநகர ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.



இதனையடுத்து மனு குறித்து கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான் கூறியதாவது. கோவை சாக்கு வியாபாரிகள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சங்கம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தின் மூலம் நலிந்த உறுப்பினர்களுக்கு வீட்டு மனைகளை சங்கத்தின் மூலமாக குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



ஆனால் முன்னாள் நிர்வாகிகள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து சங்கத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் சங்க நிர்வாகிகள் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து காசோலைகள், கட்டிட சாவி உள்ளிட்டவற்றை எடுத்து சென்று விட்டனர்.

நாங்கள் பலமுறை கேட்டும் திருப்பி தரவில்லை எனவே இதுகுறித்து கோவை மாநகர ஆணையாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...