கோவை வேளாண் பல்கலையின் 53வது நிறுவன நாள் விழா - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 53வது நிறுவன நாள் விழா இன்று நடைபெற்றது, இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்துகொண்டு, சிறந்த பெண் விஞ்ஞானி, சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர் மற்றும் 25 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.



கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவன நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவன நாள் இன்று காலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி கலந்து கொண்டார். 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் C.ராமசாமி மற்றும் K.ராமசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி சிறப்புரை ஆற்றினார்.



அப்போது அவர் பேசியதாவது, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கிறது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பல்வேறு ஆட்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றி நாட்டின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறார்கள். நாடு சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்தில் உணவு தேவையை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது. 

ஆனால் தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளால் நம் நாடு தன்னிறைவு பெற்ற உணவுப் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. தற்போதைய சூழலில் காலநிலை மாற்றம், விளைநிலங்களை தொழிற்சாலைகள் ஆக்குதல், பணியாட்கள் பற்றாக்குறை, மற்றும் யானைகள் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் போன்ற காரணிகள் வேளாண்மை வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. 

அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும் பல்கலைக்கழகம் பெரும் பங்கு வகிக்கிறது. பல சிறந்த மாணவர்கள் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள். அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை தொழில்முனைவோர் ஆக்கலாம். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் அமைந்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். மேலும் பல்வேறு துணை வேந்தர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பல்கலைக்கழகம் மேலும் வளர்ச்சி அடைந்து உலகிலேயே சிறந்த ஆராய்ச்சி நிறுவனம் ஆகவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.



இந்நிகழ்வில் சிறந்த ஆராய்ச்சியாளர்கள், சிறந்த பெண் விஞ்ஞானி, சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர், பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் பணியாற்றிய ஊழியர்கள் போன்ற பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. 



இவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விருதுகளை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...