மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றசாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும் கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களான ஐ என் டி யு சி, ஏ ஐ டி யு சி, ஹெச் எம் எஸ், சி ஐ டி யு, எம் எல் எப், எஸ் டி டி யு, எம் எல் எப் போன்ற அமைப்புகளின் சார்பில் பாஜக எம்.பியான பிரிஜ் பூசன் சரண்சிங்- ஐ கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் என்ற பதவியை அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகளை டெல்லி காவல்துறையினர் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. 



அமைதியான முறையில் போராட்டம் நடத்திய வீரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.

கோவையில் உள்ள தொழிற்சங்கங்கள் சார்பில் மல்யுத்த வீரர்களுக்கான போராட்டத்தில் தொடர் பங்களிக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...