பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 2.5 சவரன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பொள்ளாச்சி அடுத்த பவானிசங்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயகி (72) கோவிலுக்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்ற நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை மர்மநபர்கள் இருவர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பவானி சங்கர் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி ரங்கநாயகி (72). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றுள்ளார். 

அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர். அப்போது, அதிர்ச்சியடைந்த மூதாட்டி செயினை பிடித்து இழுத்துள்ளார். 

இதில், செயின் அறுந்த நிலையில், இளைஞர்கள் அவர்கள் கையில் கிடைத்த 2.5 பவுன் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற இளைஞர்களை தேடி வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...