கோவையில் கஞ்சா விற்பனை - கேரளாவை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது!

கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர்களான எம். அர்ஜூன் (21), வி. அர்ஜூன் (22), அக்சய் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி போலீசார் நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று கஞ்சா எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ஆம் ஆண்டு படிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (22) என்பவர், திருச்சூர் பேருந்து நிலையம் சென்று வினித் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வந்து உடன் படிக்கும் நண்பர்கள் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அறையில் இருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த திருச்சூரை சேர்ந்த எம். அர்ஜூன் (21), எர்ணாகுளத்தை சேர்ந்த வி. அர்ஜூன் (22), திருச்சூரை சேர்ந்த அக்சய் (22) ஆகியோரை கைது செய்தனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...