சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா - பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.



நீலகிரி: கோத்தகிரி அருகேயுள்ள சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாளையொட்டி பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். 

முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாக திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கொண்டாட்டங்கள் தடபுடலாக நடைபெறுவது வழக்கம். 

வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்துச்சென்று முருக பெருமானை வணங்குவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. 

அப்போது டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். 

கோவிலில், ஐந்து முக விளக்கு ஏற்றி, அதில் 5 வித எண்ணை ஊற்றி, 5 வகை புஷ்பம் சமர்ப்பித்து, சுவாமிக்கு 5 வகை பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், பழங்கள் மற்றும் கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது. 

இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கவச பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...