சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.



கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் பசுமை இயக்கம் சார்பில் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்றைய தினம் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் பசுமை இயக்கத்தினர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதனையடுத்து பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு துவங்கப்பட்டது.



இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...