லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐ.டி. ஊழியர்கள் அதிகம் - கோவை மாவட்ட எஸ்பி தகவல்!

லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும், அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: லோன் ஆப் மூலம் ஐ.டி. ஊழியர்கள் அதிக அளவில் ஏமாந்துள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்கபட்ட செல்போன்கள் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் 30 லட்ச ரூபாய் மதிப்புடைய 162 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை தவறவிட்டவர்கள், பறிகொடுத்தவர்களிடம் அவற்றை ஒப்படைத்தார். 



இதன் பின்னர் எஸ்.பி. பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது,



கடந்த ஏப்ரல் முதல் 1160 செல்போன்களை மீட்டு கொடுத்து இருக்கின்றோம்.

இது வரை இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நடந்த 22 கொலை வழக்குகளில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 20 மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 177 லாட்டரி வழக்குகள் பதியப்பட்டு 15 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை தொடர்பாக 280 வழக்குகள் பதியப்பட்டு 503 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது எனவும் இதன் மதிப்பு 53 லட்சம் ஆகும். சைபர் கிரைமில் 6.50 கோடி மதிப்புடைய பணம் மோசடி புகார்கள் வந்துள்ளது. இதில் 6 கோடி ரூபாய் வரை வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை புறநகர் பகுதியில் 85 விளம்பர பலகைகள் இதுவரை அகற்றப்பட்டு உள்ளது. விளம்பர பேனர்களை மட்டும் அகற்றாமல் அதை பொறுத்தும் கம்பிகளையும் அகற்ற சொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கருமத்தம்பட்டி பேனர் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...