தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில் ரோடு ஷோ நடத்தி எட்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மாலை சென்னை திரும்புகிறார்.


Coimbatore: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இன்று மதியம் கோவை விமான நிலையத்திற்கு வரும் விஜய், கொச்சின் – சேலம் ஆறுவழிச் சாலை மார்க்கமாக அவிநாசி நோக்கிப் புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் U டர்ன் எடுத்து மீண்டும் அதே வழியில் பைபாஸ் திருப்பூர் சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கொச்சின் – சேலம் ஆறுவழிச்சாலை வழியாக பெருமாநல்லூர் நான்கு ரோடு சந்திப்பிற்குச் செல்லும் விஜய், மாலை 4 மணிக்கு வாகனத்தில் இருந்தபடி எட்டு வேட்பாளர்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்.

பின்னர் பெருமாநல்லூர் – திருப்பூர் சாலையில் பூலுவபட்டி வரை சென்று U டர்ன் எடுத்து மீண்டும் பெருமாநல்லூர் நால்வழிச்சாலை வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து சேலம் – கொச்சின் ஆறுவழிச்சாலை வழியாக கோவை விமான நிலையத்திற்குத் திரும்பும் விஜய், இன்று மாலை சென்னைக்குப் புறப்படுகிறார்.

விஜய் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...