கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். வயது வரம்பு இல்லை. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 2026 மாதத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 19, 2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது.

இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதி முற்றிலும் இலவசம்.

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு விண்ណப்பதாரர்களை தேர்வு செய்யவுள்ளன. இம்முகாமில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும். முக்கியமாக, இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் www.tnprivatejobstn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை தரலாம்.

மேலும் விவரங்களுக்கு 8056358107 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு இம்முகாமைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...