கோவையில் விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர்!

உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை வாலாங்குளத்தில்‌ மாநகராட்சி மற்றும்‌ டாக்டர்‌ கலாம்‌ பவுண்டேசன்‌ இணைந்து பயன்படுத்தப்பட்ட சிகரெட்‌ கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களின்‌ விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் கிராந்திகுமார்‌ பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ ஆகியோர்‌ துவக்கி வைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவங்கி வைத்தார்.



உலக சுற்றுச்சூழல்‌ தினத்தை முன்னிட்டு கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வாலாங்குளத்தில்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ டாக்டர்‌ கலாம்‌ பவுண்டேசன்‌ இணைந்து பயன்படுத்தப்பட்ட சிகரெட்‌ கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மெத்தை, தலையணை, யோகா மேட்‌ மற்றும்‌ பொம்மைகள்‌ ஆகிய பொருட்களின்‌ விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்‌ கிராந்திகுமார்‌ பாடி, மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்‌.

முன்னதாக, பந்தய சாலை (ரேஸ்கோர்ஸ்‌ மீடியா) தாமஸ்‌ பூங்கா பகுதியில்‌ சிறப்பு தூய்மை பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ 110 INFBN (TA) Madras கமாண்டிங்‌ ஆபீசர்‌ கானல்‌ தினேஷ்‌ சிங்‌ டென்வா ஆகியோர்‌ தொடங்கி வைத்து, மக்கும்‌ குப்பை, மக்கா குப்பையை தரம்‌ பிரித்து சேகரித்தனர்‌.

அதனைத் தொடர்ந்து, கோவை‌ மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ Forest by Heartfulness, Rotary Saicity & Skal Inernational ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனம்‌ இணைந்து, உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ 4000 மரக்கன்றுகள்‌ நடும்‌ பணி,

மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணி மற்றும்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ சிறுதுளி அமைப்புடன்‌ இணைந்து வாலாங்குளம்‌ சுங்கம்‌ பகுதியில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியினை மாநகராட்சி ஆணைய‌ர் பிரதாப்‌ மரக்கன்று நட்டுவைத்து பணிகளை தொடங்கி வைத்து, மரக்கன்றுகள்‌ வழங்கினார்‌.

பின்னர்‌, வாலாங்குளத்தில்‌ கோயம்புத்தார்‌ மாநகராட்சி மற்றும்‌ சிறுதுளி, ஆக்ஸிஸ்‌ வங்கி ஆகிய தொண்டுநிறுவனம்‌ இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதத்தில்‌ குளத்தின்‌ கரைகளை சுற்றி பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ சேகரிக்கும்‌ பணியை மேற்கொண்டு, தன்னார்வலர்கள்‌ மூலம்‌ குளக்கரைகளை சுத்தம்‌ செய்தனர்‌.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...