ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் - உக்கடத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்!

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு காரணமான பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தை கண்டித்தும், ரயில்வே அமைச்சர் பதவி விலகக்கோரியும் கோவை உக்கடம் பகுதியில், தந்தை பெரியார் திராவிட கழகம் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ, திராவிட கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மாவட்டம் உக்கடத்தில் ஒடிசா கோர விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 285 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணமான ரயில்வே அமைச்சர் பதவி விலகக் கோரியும், பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தை கண்டித்தும் கோவை உக்கடம் பகுதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் தந்தை பெரியார் திராவிட கழகம் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ, திராவிட கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன், நிர்வாக குளறுபடியே ரயில் விபத்துக்கு காரணம். இதை மறைக்கவே சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசா கோர ரயில் விபத்துக்கு காரணமான ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.



கடந்த 9 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பா.ஜ.க அரசு ரயில்வே துறையை முறையாக பராமரிக்காமல் சீரழித்துள்ளது. பாதுகாப்பு கருவிகளுக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கருவிகளை ரயில்களில் பொருத்த வில்லை. ரயில்வேயில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்ப வில்லை.



ரயில்வே ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கபட்டுள்ளனர். இவற்றை பற்றி கவலை படாமல் 'வந்தே பாரத்' போன்ற ரயில்களை விடுவதாக சொல்லி விளம்பரம் தேடுவதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...