கோவை வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா மரக்கன்றுகள்!

கோவை மாவட்ட வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட மக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட மக்களுக்கு வனத்துறை சார்பில் விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின்‌ பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ கோவை மாவட்ட வனத்துறையின்‌ மூலம்‌, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்தின்‌ சார்பில்‌ 2023-24ஆம்‌ ஆண்டில்‌ நடவு செய்வதற்காக மரக்கன்றுகள்‌ விலையில்லாமல்‌ வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்பட பல்வேறு இன மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, கோவை வனவியல்‌ விரிவாக்க கோட்டத்‌தின்‌, விளம்பர சரகம்‌ ॥-ன்‌ மூலம்‌ கோவை, மத்தம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள நாற்றங்கால்‌ மூலம்‌ மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆர்வமுள்ளவர்கள்‌ நேரிலோ அல்லது கைப்பேசிவாயிலாகவோ தகவல்களை கேட்டு, விலையில்லா மரக்கன்றுகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும் தொடர்புக்கு

வனவியல் விரிவாக்க அலுவலர்,

வனவியல் விரிவாக்க கோட்டம்,

கோவை - 641043

வனச்சரக அலுவலர் / விளம்பர அலுவலர்

விளம்பர சரகம் - II

கோவை

தொலை பேசி எண்கள்: 8667266884, 8220151817

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...