கோவையில் போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.145.58 கோடி பணபலன்களை வழங்கிய அமைச்சர்கள்!

கோவை கிளை போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு, ஓய்வு பெற்ற 353 பணியாளர்கள், விருப்பார்ந்த பணி ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.145.58 கோடி பணபலன்களை வழங்கினர்.



கோவை: கோவையில் போக்குவரத்து துறையின் சார்பில் 158 பணியாளர்களுக்கு பணபலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக கோவை கிளை பணிமனையில் பணியாளார்களுக்கு பண பலன்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். 



தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில், கோவையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 353 பணியாளர்கள், விருப்பார்ந்த பணி ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு 145.58 கோடி மதிப்பிலான பணபலன்களை வழங்கினர். 



அதனைத் தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பேருந்துகளில் முதல் கட்டமாக 65 பேருந்துகளுக்கு GPS மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. 



மேலும் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள் ஈரோடு மண்டலத்தில் மூன்று பணிமனைகள் மற்றும் திருப்பூர் மண்டலத்தில் ஒரு பணிமனை என 7 பணிமனைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகளை துவக்கி வைக்கப்பட்டு அனைத்து ஓட்டுநர்களுக்கும் ஓட்டுநர் கையேடு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...