பூரண மதுவிலக்கு கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க நாம் தமிழர் கட்சி முடிவு!

கோவை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளதாக அறிவிப்பு.‌



கோவை: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 







பூரண மதுவிலக்கு என்பதை நாம்‌ தமிழர்‌ கட்சி கொள்கையாக‌ கொண்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌ வரும்‌ ஜூன் 12ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ பூரண மதுவிலக்கு கோரி, பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற்று மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளோம்‌.



எனவே தானியங்கி பிரச்சார வாகனம்‌ மூலம்‌ பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற அனுமதி கொடுக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌. இதனால்‌ பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும்‌ வராது என்பதை உறுதீபட தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் இதுபோல வழிமுறையை பின்பற்றுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...