உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறுதுளி நிறுவனம் சார்பில் திட்டங்கள் தொடங்கி வைப்பு!

சிறுதுளி நிறுவனத்தின் சார்பில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளக்கரைகளை மேம்படுத்துவது, தூர்வாரும் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தன்னார்வலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: சிறுதுளி நிறுவனத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 2003ஆம் ஆண்டு சிறுதுளி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. கோயம்பத்தூரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்து வருகின்றன. குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பணிகளை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.



சிறுதுளி மற்றும் பாஷ் நிறுவனம் இணைந்து துடியலூர் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 5௦௦௦ மரங்கள் நடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இதனை பராமரித்து மரங்கள் நன்கு வளர்ச்சி அடைத்து உள்ளது. இதனால் அங்கு சுற்றுசூழல் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாஷ் நிறுவனம் கடந்த ஜூன் 3ஆம் தேதி சுமார் 100 தன்னார்வலர்களை கொண்டு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை களையெடுத்தல், செடிகளை சுற்றி கரை அமைத்தல், இடத்தினை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்தனர்.



குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பணிகளை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகின்றன.



இதனை தொடர்து, சிறுதுளி மற்றும் APEXON நிறுவனம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி 150 நபர்கள் கொண்ட குழு சுமார் 150 நாட்டு மரகன்றுகள் துடியலூர் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டது.

இந்நிகழ்வில் APEXON நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிறுதுளி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



சிறுதுளி மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் இணைந்து ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரூர் செட்டிபாளையத்தில் எம்.ஆர்.கார்டன் என்ற இடத்தில் சுமார் 1000 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கப்பட்டது.



தொடர்ந்து, ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வாலாங்குளத்தில் வடக்கு கரையில் மரங்கள் நடும் பணி துவக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாலாங்குளத்தில் சிறுதுளி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி கோயம்பத்தூர் கிளைகள் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் குளத்தின் கரைகளை சுற்றி பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் PSG கல்லூரியை சேர்ந்த சுமார் 100 தன்னார்வலர்களை கொண்டு கரைகளை சுத்தம் செய்தனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...