பூரண மதுவிலக்கு கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினர்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியினர் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்தும், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியினர் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்தும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி மாநிலம் தழுவிய மதுவிற்கு எதிராக கையெழுத்து பெற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டும் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (TASMAC) மூலம் மதுவிற்பனையை அரசே முன்னெடுத்து நடத்தி வரும் அவல நிலை தொடர்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கிறது. 

டாஸ்மாக் சமூகத்திலும் பல குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையிலும் பெரும் அழிவை உருவாக்குகிறது. பெண்கள் குடும்ப வன்முறை நிதி நிலையின்மை மற்றும் அனைத்து வகையான சீரழிவுகளுக்கும் ஆளாகிறார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 

நகரின் முக்கிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைந்திருப்பதால் மது அருந்தி விட்டு வருபவர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளனர். இதுவரை ஏற்பட்ட டாஸ்மாக் சீரழிவுகளுக்கு அரசு பொறுப்பேற்ற முழுமையான மதுவிலக்கினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்‌. 



மேலும் இதுவரை மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மகளிருக்கும் உரிய வழிகாட்டுதல்களையும் நிவாரணங்களையும் வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...