சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான சென்னை பசுமை வழிச்சாலை வீடு மற்றும் கரூரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



சென்னை: சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மின்சாரம் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்த நிலையில் வருமானத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லம் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த திடீர் சோதனை குறித்து எனக்கு தகவல் எதுவும் வழங்கப்பட வில்லை. சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது எதுவும் கூற இயலாது. பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். சோதனைக்கு பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். 

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...