தனியார் பள்ளியை மிஞ்சும் அதிநவீன வசதிகளுடன் இடிகரை அரசு பள்ளி!

கோவை மாவட்டம் இடிகரையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை: இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருவது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி துவக்க நாள் விழா நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக நடைபெற்றது. தேர்வு விடுமுறை நிறைவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு உள்ள பள்ளிகள் அனைத்தும் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

அதன்படி இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி துவக்க நாள் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் தாய் வாழ்த்தைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சுமதி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக பள்ளிக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கும், ஏற்கனவே பயின்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கைதட்டி ஆசிரியர்கள் உற்சாகமாக மாணவர்களை வரவேற்றனர்.



தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சுமதி மாணவர்களிடம் பாடல்கள் பாடி அறிவுரை கூறி அசத்தியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆங்கில வழியில் 10ஆம் வகுப்பு பயின்று முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது,



தமிழ் வழியில் 10ஆம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஆண்டாள் அம்பாள் குடும்பத்தார் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2022-2023 கல்வியாண்டில் முதலிடம் பிடித்த மாணவியின் உயர்கல்வி பயில ஏதுவாக ரூபாய் 50,000 காசோலை வழங்கப்பட்டது,



அதேபோல் முதல் 5 இடம் பிடித்த மாணவர்களுக்கு தல 2000 ரூபாய் வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரின் பாதுகாப்பில் பயின்ற ராகவன் என்ற மாணவருக்கு 3 ஆண்டு பாலிடெக் கல்லூரி கட்டணம் முதல் தவணையாக 10 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது.



மேலும் 100 சதவீத தேர்ச்சியை வழங்கிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். பிறகு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் செய்யப்பட்டு வசதிகளை பார்வையிட்டனர்.

தலைமை ஆசிரியர் சித்ரா வகுப்பறைகளில் உள்ள வசதிகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில் குறிப்பாக ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் மூலமாக கணினி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளி வளாகத்துக்குள் பயின்று வரும் குழந்தைகளுக்கு பகுதி நேரத்தில் தையல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஸ்டேஷனரி பொருட்கள் அனைத்தும் குறைவான விலையில் மாணவர்களே எடுத்துக் கொண்டு பணத்தை உண்டியலில் போடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு சி. ஆர். ஐ. ஹெச். ஆர். மேனேஜர் அண்ணாதுரை, ஹெச். ஆர். ராஜா, என்.எம்.சி.டி. நிறுவனர் சங்கரநாராயணன், பாலகோபாலன் டிரஸ்ட் திருவேங்கடசாமி, சைக்கிள் நிறுத்தம் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன், ஆண்டாள் அம்பாள் குடும்பத்தார், சசிகுமார், அமெரிக்க வாழ் முன்னாள் மாணவரின் மகன் அருண் தேவராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் பகத்சிங் மனைவி தேவ பூ, தெய்வநாயகி ஏஜென்சி குருசாமி நினைவாக லோகநாதன், இவர்களுடன் உதவி தலைமை ஆசிரியர் தினேஷ் குமார், நிகழ்ச்சியினை அனைத்தையும் தொகுத்து வழங்கிய சாந்தம்மா, மேலும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...