திட்டக்குழு தேர்தல் குறித்து கோவையில் திமுக ஆலோசனை கூட்டம்!

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் டாடாபாத் பகுதியில் திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வரும் ஜூன்23ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.



இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், திமுக கோவை மாவட்ட கழக நிர்வாகிகள், நகர ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலை குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...