கோவையில் வ.உ.சி மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் துவங்கியது!

உலகின் மிகப் பிரபலமான, 102 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தி கிரேட் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.



கோவை: உலகின் மிகப் பிரபலமான பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி கோவையில் இன்று கோலாகலமாக துவங்கியது. 



உலகின் மிகப் பிரபலமான, 102 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தி கிரேட் பாம்பே சர்க்கஸ் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவையில் நடைபெறுகிறது. 



ஒரு மாத காலத்திற்கு வஉசி மைதானத்தில் இந்த சர்க்கஸ் நடைபெறுகிறது. நாள்தோறும் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகள் இடம்பெறுகிறது. 



இதில் 30க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



மேலும் இந்தியாவில் முதல்முறையாக உலக சர்க்கஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெங்கல பதக்கம் பெற்ற எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் இந்த பங்கேற்றுள்ளனர். 



மேலும் மணிப்பூரிலிருந்து எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் வந்துள்ளது. 



இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில், கிளப் ஜக்லிங்க், ரோலர் ஆக்ட், ஜிம்னாஸ்டிக், ஸ்பியர் பேலன்ஸ் என பல்வேறு சாகசங்கள் நடத்தப்படுகின்றன.



முதல் நாள் துவங்கப்பட்ட பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சியை முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன், வீடியோ ஸ்பெக்ட்ரம் செல்வராஜ், கிரேன்ட் ரீஜன்ட் ஜெனரல் மேனேஜர் ரமேஷ் சந்திர குமார், நேரு குழுமம் மக்கள் தொடர்பு துறை முரளிதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



இதில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 



மேலும் சர்க்கஸிற்கு குழுவாக வரும் பள்ளி மாணவர்களுக்கு 40% தள்ளுபடி அளிக்கப்பட உள்ளதாகவும் பாம்பே சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...