கோவையில் ஜாக் கமிட்டி சார்பில் பக்ரீத் தொழுகை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ஜாக் கமிட்டி சார்பில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே ஜாக் கமிட்டி சார்பில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது. கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்றைய தினம் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர். 



குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா திருமண மஹாலில் இன்று காலை சிறப்பு தொழுகை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. 



இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 



சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாட படுவதாகவும், அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். 

மேலும், அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர். 



பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நாளை பக்ரீத் பண்டிகையினை கொண்டாட உள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...