கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 32 மருத்துவர் பணியிடங்கள் வரும் மாதத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், வரும் மாதத்திலேயே காலி இடங்கள் நிரப்பப்படும் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்கள் காலி பணியிடங்களும் வரும் மாதத்தில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இரண்டாவது பட்டமளிப்பு விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 



இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2017 எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பை நிறைவு செய்த 101 மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 32 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்லூரி முதல்வர் எங்களிடம் கேட்டார். காலி பணியிடம் நிரப்புவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்களது கோரிக்கைகள் நிறைவேற உள்ளது, வரும் மாதத்திலேயே இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...