கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் சாலை சீரமைப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை சீரமைப்பு பணிகள், மழைநீர் வடிகால் பராமரிப்பு, கால்வாய் தூர்வாருதல் மற்றும் மழைக்கால மீட்புப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

சேதமடைந்த சாலைகளில் உடனடி சீரமைப்பு

மழையால் சேதமடைந்துள்ள முக்கிய சாலைகள், இணைப்புச் சாலைகள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து, பள்ளங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட்டு, அவசரமாக பேட்ச் ஒர்க் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.

சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் தரமான தடுப்புகள், ஒளி பிரதிபலிக்கும் எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் இரவு நேர எச்சரிக்கை விளக்குகள் அமைத்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

புதிதாக அமைக்கப்படும் சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் சரிவு மற்றும் மழைநீர் வடிகால் இணைப்புகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரிகள் கள ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சாரப் பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகள், பணிகள் முடிந்தவுடன் தரமாக மீளமைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள், கீழ்ப்பாலங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரதான சாலைகளை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் மற்றும் நீர்வரத்து பகுதிகளில் குப்பைகள் மற்றும் மண் அடைப்புகள் இல்லாமல், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மரக்கிளைகள் விழும் அபாயம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மின்சார வாரியம் தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மழைக்கால இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து மேலாண்மை மற்றும் துறை ஒருங்கிணைப்பு

மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய முக்கிய சந்திப்புகள் மற்றும் மாற்றுப்பாதைகள் தேவைப்படும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தேவையான போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

அவசரகால சூழ்நிலைகளில் மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநகர காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி துணை ஆணையர்கள், பொறியியல் துறை அதிகாரிகள், மாநகர் நல அலுவலர், மண்டல உதவி ஆணையர்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...