நில ஆர்ஜித நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு - விவசாயிகள் சங்க பொது செயலாளர் தகவல்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.



கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்க கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. 



இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் சங்க (சாதி, மதம் கட்சி சார்பற்றது) ஒருங்கிணைப்பாளர் மணி, மாநில பொது செயலாளர் கந்தசாமி தலைமையில் சிவானந்தா காலனியில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கோரிக்கை பெட்டியில் மனு அளித்தனர். 



இதனையடுத்து செய்தியாளர்களிடம் விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது, 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1980ம் ஆண்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டை கட்டி தர வேண்டும் என்ற நல்ல நோக்கில் விவசாயிகளிடம் இருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்படும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

இதற்காக கோவையில் வீரகேரளம், வடவள்ளி, வெள்ளக்கிணறு, கணபதி தெலுங்குபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் சௌரிபாளையம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்த முன்மொழிவு செய்யப்பட்டது. 

வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த பின்னரும் சிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டும், வழங்கப்படாமலும் உள்ளது. இதனால் பல கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...