இந்த ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை, மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர் - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டிகளை துவங்கி வைத்த தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டு துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை. மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.



கோவை: இந்த ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை, மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளதாக தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மைதானத்தில், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், சிற்றுளி அறக்கட்டளை, மார்ட்டின் குழுமம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்றது.

நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் ஜூலை 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி,



கோவை மாவட்டத்தில் பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிற்றுளி அறக்கட்டளை சார்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவில் கூடைப்பந்து போட்டி உட்பட சக்கர நாற்காலி போட்டிகள் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிகளை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை தந்தனர். நேரு ஸ்டேடியத்திற்கும் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு மின்விளக்குகள் எல்லாம் மாற்றி புதுப்பிக்கப்பட்டது.

அதேபோல் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கும் நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை நிறுத்தி செம்மொழிப் பூங்கா அமைக்க உள்ளனர். விளையாட்டை பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டு வீரர் வீராங்கனைகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

இந்த ஆட்சியைப் பொறுத்தவரை வாழ்த்தி சொல்ல எதுவும் இல்லை, அதற்கான வாய்ப்பும் கிடையாது. எந்த திட்டமும் வரவில்லை, கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒரு சாலை கூட போடப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் முடிவு பெறவில்லை. சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதையும் தடுத்து நிறுத்தவில்லை.

தற்பொழுது தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழக மக்களும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என்று கூறுகிறார்கள். அந்த நாளை தான் நாங்களும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்விளையாட்டு அரங்கம் மட்டுமின்றி மாநகராட்சி பூங்காக்கள், அம்மா பூங்காக்கள் உட்பட எதுவும் பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளையும் கேட்க முடியவில்லை, கவுன்சிலர்கள், அமைச்சர்கள் என யாரையும் கேட்க முடியவில்லை.

அதுமட்டுமின்றி கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், தமிழகத்தில் எந்த திட்டங்களும் நடைபெறாமல் பொதுமக்களை ஏமாற்றப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...