தமிழகத்தில் முதல்முறையாக அரசு பணியாளர்களின் குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் காப்பகம்!

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார். இந்த காப்பகத்தில் 4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்கான சிறப்பு குழந்தை காப்பகம் கோவை ஆட்சியர் திறக்கப்பட்டுள்ளது.



பொதுவாக பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதே போல கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் பகல்நேர சிறப்பு காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார்.



4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டு உள்ளனர்.



இந்த காப்பகத்தில் 7 வயதிற்குள் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை ஒளிப்பரப்ப தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாடும் குழந்தைகள் கிழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்க மேட் போடப்பட்டு உள்ளது.



அதே போல பெற்றோர்கள் கொடுத்துச் செல்லும் உணவுகள் மட்டுமின்றி சத்து மாவுகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தினமும் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் இந்த காப்பகத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்குச் செல்லும் அரசு ஊழியர்களின் குழந்தைகளும் மாலை நேரத்தில் காப்பகங்களில் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ தனியார் பள்ளி பங்களிப்புடன் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகள் பகல் நேர காப்பகத்திற்கு ஊழியர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது.



முதல் நாளிலேயே சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பகல் நேர காப்பகத்தில் விடப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...