தேசிய மருத்துவர்கள் தினம் - கோவை அரசு மருத்துவமனையில் உற்சாக கொண்டாட்டம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூலை 1 தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மருத்துவத்துறையில் பி சி ராயின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.



மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் இருப்பது போன்று போடப்பட்டிருந்த கோலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



இதையடுத்து பயிற்சி மருவத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.



இதை தொடர்ந்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...