கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - பரபரப்பு!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த முத்துசாமி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக தனது பணியை துவங்கினார். அதை தொடர்ந்து பொறியியல் பட்டதாரியான அவர் தமிழ் வழியில் ஐபிஎஸ் தேர்வு எழுதி கடந்த 2009இல் தேர்ச்சி பெற்று காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இணைந்தார்.

முதன்முதலாக நெல்லை மாவட்ட வள்ளியூரில் ஏஎஸ்பி ஆக தனது பணியை தொடங்கிய அவர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், மாவட்ட எஸ்.பியாக பணியாற்றியவர்.

தொடர்ந்து, சிபிசிஐடியில் எஸ்.பி ஆகவும் பணியாற்றிய விஜயகுமார், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதன்முறையாக விசாரணை நடத்திய அதிகாரியாவார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை கவனித்து வந்த விஜயகுமார், கோவை சரக பொறுப்பேற்றது முதல் பல்வேறு பணிகளை செய்து வந்தார். புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடமும் கனிவாக நடந்து கொள்பவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டிஐஜி விஜயகுமார், மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை தனது முகாம் அலுவலகத்தில் இருந்த அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று இரவு கோவை மாநகர துணை ஆணையர் ஒருவரின் மகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அவரது கன் மேனிடம் (gun man) தனது துப்பாக்கியை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐ ஜி விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.



சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...