ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து திமுக சாதகப்படுத்தி கொள்கின்றனர் - பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!

கோவை நவஇந்தியா பகுதியில் நடைபெற்ற ரைஸ் ஆப் நியூ இந்தியா நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார் என கூறியுள்ளார்.


கோவை: ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து திமுக சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 123வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'Rise of New India - ரைஸ் ஆஃப் நியூ இந்தியா' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

டாக்டர்.ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை இயக்குனர் அனிர்பன் கங்குலி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

ஆர்ட்டிகள் 370 நீக்கப்பட வேண்டும் என தெரிவித்த மனிதரான ஷாம் பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.

ரவீந்திரநாத் ஜட்ஜ்மெண்ட் படிக்கவில்லை. அதைப் பார்த்த பின்பு அதன் தகவலை தெரிவிக்கிறேன். அறப்போர் இயக்கம் டிரான்ஸ்பார்ம் வாங்கியதாக 397 கோடி ஊழலை தெரிவித்துள்ளனர்.

டெண்டர் எப்படி நடந்தது என தெரிவித்துள்ளனர். டெண்டர் பிக்சிங் நடந்துள்ளது. அறப்போர் செய்திக்கு நாங்கள் ஆதரவு. அறப்போர் புகாருக்கு விசாரணை செய்ய வேண்டும். முதல்வர் இதிலும் செந்தில் பாலாஜி போல காப்பாற்றப் போவாரா.?

ஆளுநர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். திமுக இத்தனை காலம் நம்மை ஏமாற்றி உள்ளது. ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து சாதகப் படுத்திக் கொள்கின்றனர். சிபிஐ ஒரிஜினல் பேப்பர் ஆகியவற்றை கொடுக்காத போது எப்படி ஆளுநர் செயல்படுவார்.

ஆர்.எஸ். பாரதி பேசும் பேச்சுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய தொண்டர்கள் அண்ணாமலையை பிரியாணி போட்டு விடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார்.

அரிவாள் யார் புடிச்சாலும் வெட்ட தான் செய்யும். நாம் விவசாயி வேற. ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை.

என்ன தலைகீழ நின்னு தோப்பு காரணம் போட்டாலும் 2024 இல் 400 எம்பி பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவது உறுதி. தமிழகத்தில் 39 வருவது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...