அதிவேக ரயில்கள் பட்டியல்: கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு 3வது இடம்!

நாட்டிலேயே அதிக வேகமாக இயக்கப்படும் ரயில்களின் பட்டியலில் சென்னை - கோவை இடையே செல்லும் வந்தே  பாரத் ரயில் 90.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி- வாரணாசி வந்தே பாரத் ரயில் 96.37 கிலோ மீட்டர் வேகத்தில் முதல் இடத்தில் உள்ளது.


கோவை: நாட்டிலேயே அதிவேகமாக இயக்கப்படும் ரயில்களில் கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை (20644) கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படுகிறது.

கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு பகல் 11.50 மணிக்கும், சென்னையில் இருந்து பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.15 மணிக்கும் வந்து சேருகிறது.

ரயில் இயக்கப்பட்டது முதல் தொடர்ந்து முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது. சென்னை - கோவை இடையே மொத்தம் உள்ள 500 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்றடைவதால் பலரும் இந்த ரயிலை விரும்பி பயணித்து வருகிறார்கள்.

இதில் சாதாரண கட்டண மாக ரூ.1,365 (உணவு உள்பட), எக்ஸ்கியூட்டிவ் கட்டணம் ரூ.2,485-ம் (சாப்பாடு உள்பட) வசூலிக்கப்படுகிறது.

நாட்டிலேயே 3-வது அதிவேக ரயில்

கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் கோவை முதல் ஜோலார்பேட்டை வரை மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகிறது.

கோவை- சென்னை இடையே சராசரியாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இது நாட்டிலேயே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கான பட்டியலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, டெல்லி- வாரணாசி வந்தே பாரத் ரயில் 96.37 கிலோ மீட்டர் வேகத்தில் முதல் இடத்தில் உள்ளது.

ஹஜரத் நிஜாமுதீன் - ராணி கம்லாபதி வந்தே பாரத் ரயில் 95.89 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 2-வது இடத்திலும், சென்னை - கோவை வந்தேபாரத் ரெயில் 90.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 3-வது இடத்திலும் உள்ளது.

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரெயில் 79.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10வது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...