உழவர் சந்தையில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை தீவிரம்!

தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தோட்டக்கலை துறையின் மூலம் வரத்தினை அதிகரித்து உழவர் சந்தைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் தக்காளியை குறைந்த விலைக்கு உழவர் சந்தையில் விற்பனை செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்டத்தில் வெளிச்சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் வரத்தினை அதிகரித்து உழவர் சந்தைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி தடையின்றி கிடைக்க தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் ஆகியோர்களால் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம் மற்றும் பொள்ளாச்சி உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் விவசாயிகளிடம் தக்காளியை கொள்முதல் செய்து, உழவர் சந்தைகளில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சித் துறை, வளர்ச்சி முகமையின் மூலம் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் என்ற அளவில் நுகர்வோருக்கு விற்பனை செய்ததாகவும்

இனிவரும் காலங்களிலும் தக்காளி வரத்தினை அதிகரித்து தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தக்காளியை கொள்முதல் செய்து சந்தை விலையை விட குறைந்த விலைக்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...