கோவையில் வசந்த் அண்ட் கோ கட்டிடத்தில் திடீர் தீ விபத்து - பரபரப்பு!

காந்திபுரம் பகுதியில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏசியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனதிதில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் வசந்த் அண்ட் கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் கட்டிடத்தின் மாடியில் மின் கசிவால் திடீரென ஏசியில் தீப்பற்ற தொடங்கி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விரைந்து வந்த இரண்டு தீயணைப்பு வாகனத்துடன் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியான காந்திபுரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.



மேலும் தீ விபத்து தொடர்பாக காட்டூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...