குருப் 4க்கான காலி பணியிடங்களை 15,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்!

சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப் 4-க்கான காலி பணியிடங்களை 10292-ல் இருந்து குறைந்தபட்சம் 15,000ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை: குருப் 4க்கான காலி பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஓராண்டு காலமாக நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுக்கும் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வெளியிடுகிறது. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தும் பணி கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெரும்பாலானோர் அனைத்து தேர்வுக்கும் அடுத்தடுத்து தயாராக கூடியவர்கள் (குரூப் 1 குரூப் 2/2a குரூப் 4), கடந்த ஆண்டு மே மாதம் குரூப்2/2a தேர்வுகளும், குரூப் 4 தேர்வுகள் ஜூலை மாதத்திலும் அடுத்தடுத்து நடைபெற்றன.

இதற்கான தேர்வு முடிவுகள் தேர்வாணையம் அறிவித்த மாதத்தில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வெளியிட்டது. இதில் குரூப் 2/2a முதல்நிலை தேர்வுகளுக்கான முடிவுகளும் காலதாமதமாகி வந்ததால் அதற்கான முதன்மை தேர்வானது இந்தாண்டு பிப்ரவரி மாதம் தான் நடைபெற்றது.

அதற்கான தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதேபோல் குரூப் 4-க்கான தேர்வு முடிவுகள் ஏழு மாதம் கழித்து இந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியிட்டது. அதற்கான கலந்தாய்வு இந்த மாதம் 20ம் தேதியில் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

திட்டமிட்டடி குரூப் 2/2a தேர்வுக்கான முடிவுகள் வெளிவந்து இருந்தால் அதில் தேர்ச்சி அடைந்தவர்கள் குரூப் 2/2a வேலைக்குச் சென்று இருப்பார்கள். ஆனால் தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் தற்போது அவர்களில் பெரும்பாலானோர் குரூப் 4 தேர்வையும் எழுதி இருப்பார்கள்.

அவர்களில் குறைந்தபட்சம் 3000 நபர்கள் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கான வேலையை எடுத்துக் கொள்வார்கள், பிறகு மூன்று மாதம் கழித்து டிசம்பர் மாதத்தில் குரூப் 2/2a தேர்வுக்கான முடிவுகள் வரும் போது குரூப் 4 இல் வேலை எடுத்தவர்கள் சுமார் 3000 நபர்கள், குரூப் 4 இல் எடுத்த பணியை விட்டு விட்டு, குரூப் 2/2a வேலைக்கு சென்று விடுவார்கள்.

இதனால் ஏற்படும் வெற்றிடத்தை டிஎன்பிஎஸ்சி அடுத்த தேர்வில் தான் சேர்க்கும். இதனால் குரூப் 4 தேர்வுக்காக மட்டும் தயாரானவர்கள் இந்தாண்டு தேர்ச்சி பெற்று இருந்தும் பணி கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது.

அதேவேளையில் டி.என்.பி.எஸ்.சி-ன் இந்த நடவடிக்கையால் குரூப் 2/2a எழுதியவர்கள் குரூப் 4 லும் வேலை எடுத்து விட்டு பிறகு குரூப் 2/2a லும் வேலை எடுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் மூன்று ஆண்டுகளாக குரூப் 4 தேர்வுக்காக மட்டுமே படித்து தேர்ச்சி பெற்றிருக்கும் நபர்களில் குறைந்த பட்சம் சுமார் 3000 நபர்களின் அரசு பணி வாய்ப்பு என்பது மறைமுகமாக பறிக்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு அரசானது நடந்து முடிந்த குரூப் 4 (2022) தேர்வில் மேலும் 5000 காலிப்பணியிடங்களை சேர்த்து 10292 இல் இருந்து 15000 காலிப்பணியிடங்களாக உயர்த்தி கலந்தாய்வை நடத்தி அரசு பணிவாய்ப்பு பறிபோகும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய முன் வர வேண்டும்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 17.06.2023 தேதியில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...