ஆடி அமாவாசையையொட்டி பேரூர் கோவிலில் குவிந்த மக்கள் கூட்டம்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் கோவிலில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.


கோவை: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவையில் உள்ள 2000 வருடம் பழமை வாய்ந்த பேரூர் கோவிலில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலையில் இருந்தே கூட்டம் அலைமோதி வருகிறது.



ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை முயலாற்றில் பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டுபோல் இல்லாமல் இந்த வருடம் மழைப்பொழிவு இல்லாததால் ஆற்றில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.



இதன் காரணமாக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில், தர்ப்பணம் செய்யும் பக்தர்களுக்கு சபர் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது எனவே அதிகாலை முதற்கொண்டு பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர்.



இந்நிலையில், பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...