கோவை நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தல் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாக்களித்தார்!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் பல்வேறு பதவிகளுக்கான பள்ளி மாணவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணி அம்மாளும் மாணவர்களுக்கு வாக்களித்தார்.



கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.



கோவை கோட்டைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான நல்லாயன் துவக்க பள்ளியில் பள்ளி மாணவர் தேர்தல் இன்று நடைபெற்றது.



இப்பள்ளியில் வருடம் தோறும் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெறும். இதில் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு பொறுப்பிற்கும் போட்டியிடுவர்.



தேர்தலில் நடைபெறும் முறைப்படியே, வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள், பதவியேற்பு போன்றவை நடைபெறும். அதன்படி இன்றைய தினம் வாக்களிப்பு நடைபெற்றது. இதற்கென கணினி மயமாக்கப்பட்ட வாக்களிப்பு இடம் அமைக்கப்பட்டு மாணவர்கள் வாக்களித்தனர்.



இதனை பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையிட்டனர். இந்த வருடம் பள்ளி தலைவர், துணைத் தலைவர், உணவுத் தலைவர், விளையாட்டு தலைவர், சுற்றுச்சூழல் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தலா மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இதற்கென ஒவ்வொருவருக்கும் தனித்தனி சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த மாணவர் தேர்தலில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணி அம்மாள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி செயல் அதிகாரி சுமதி ஆகியோரும் வாக்களித்தனர். மேலும் மாணவர்களுடனும் இது குறித்து கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...