விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா? - இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பதில் என்ன?

விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா? என நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அரசியலை பற்றி தெரிந்தவர்கள் பேசலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ரஜினியுடன் இணையும் படத்திற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்று கூறினார்.



கோவை: இரும்புக்கை மாயாவி தான் தனது கனவு படம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள SNS தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் பேசியதாவது,



லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது தான் முடிந்துள்ளது. மீதமுள்ள வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். நடிகர் கார்த்தி கூறியது போன்று சமூகம் சார்ந்த பணிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

இரும்பு கை மாயாவி படம் தற்போதைக்கு எடுக்க முடியாது. அதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. பத்து படம் முடித்துக் கொண்டு என் சினிமா பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

அண்மையில் நண்பர் விளம்பரம் செய்வதற்காக ஒரு யூனிட் செட்டப் தேவைப்பட்ட போது கோவையில் கிடைக்கவில்லை. அதனை பாலக்காட்டில் இருந்து கொண்டு வர வேண்டிய நிலை இருக்கிறது. வருங்காலத்தில் கோவையில் படம் பண்ணுவதற்கான நிலை வரவேண்டும். அதற்கான முதல் கால் நான் எடுத்து வைக்க தயாராக இருக்கிறேன்.

வங்கியில் நான்கு வருடம் வேலை செய்தேன், நமக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய வேண்டும். அதன்படி தான் சினிமாவிற்கு வந்துள்ளேன். லியோவில் அரசியல் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் இல்லை.

விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா? என நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அரசியலை பற்றி தெரிந்தவர்கள் பேசலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை . அரை குறைவான அறிவு ஆபத்தானது என்ற பழமொழி உண்டு, ஆக எனக்கு அதைப் பற்றி எனக்கு தெரியாது என பதிலளித்தார்.

விஜயை நான் அண்ணன் என்று கூப்பிடுவதற்கு அவர் நல்ல மனிதர் அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜயுடன் மூன்றாவது படம் இணைய காத்திருக்கிறேன். கண்ணிமைத்தால் படம் செய்வேன். சமூக நீதி சார்ந்த படங்கள் இயக்க எனக்கு போதிய அறிவில்லை என நினைக்கிறேன்.

சினிமாவில் 150 ரூபாய் கொடுக்கும் ரசிகரின் மரியாதை மிகப்பெரியது. நான் எடுப்பது கமர்சியல் சினிமாதான் வேற பெரிய படங்கள் எடுப்பதில்லை. ஆயிரம் கோடி வசூல் ஈட்டுமா என்பது கருத்தை தாண்டி எனக்கு ரசிகர் கொடுக்கக்கூடிய ஒரு 150 ரூபாய் முக்கியம். லியோவை தொடர்ந்து அடுத்து ஒரு படம் செய்கிறேன். அதை தொடர்ந்து பிறகு கைதி 2 நடக்கும்.

வருமான வரி துறையில் இருந்து எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள். அப்போது நான் கூறிய வார்த்தை வருமான வரி கட்டும் பணம் யாருக்கு பயன்படுகிறது என்று தெரியவந்தால் கொடுப்பது எனக்கும் மகிழ்ச்சி ஒரு வெளிப்படை வேண்டுமென தான் குறிப்பிட்டிருந்தேன்.

சமூக வலைதளங்களில் வெளியாகும் படத்தை ஒன்னும் செய்ய முடியாது. எதிர்பார்ப்பின் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில் படத்தை பகிர்கிறார்கள்.

ஆனால் அதற்கு பின்பு ஏராளமான மக்களின் உழைப்பு இருக்கிறது. அது தெரிந்தால் இவ்வாறு செய்ய மாட்டார்கள். லியோ அப்டேட் குறித்த கேள்விக்கு செப்டம்பர் ஆடியோ லான்ச்சில் ரிலீஸ் ஆகும். கோவைக்கு விஜயை அழைத்து வர முயற்சிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...