காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்!

காய்கறி விலை உயர்வை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு காய்கறிகள் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறிகளான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காய்கறி விலை உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வலைத்தளவாசிகள் மீம்ஸ் மற்றும் காமெடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழக அரசு காய்கறி விலையை கட்டுப்படுத்தவும் மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும் பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...