கோவையில் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கம்

கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது.



அதன் துவக்க நிகழ்ச்சி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கலந்துகொண்டு இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தனியார் தொண்டு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இத்திட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம், புரோபெல் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து அரசு அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வீட்டில் உபயோகம் இல்லாமல் இருக்கும் விளையாட்டு பொருட்களை சேகரித்து வழங்குவர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...