தாராபுரம் அருகே டீக்கடைக்குள் புகுந்த கலவை லாரி - 3 பேர் பலியான சோகம்!

திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி ஒன்று தாராபுரம் அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி தாராபுரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர் சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றி வந்த லாரியை ரத்தினகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.



திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, தாராபுரம் அடுத்த சூரியநல்லூர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கலாமணியின் டீக்கடைக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது.



இதில் கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி(62) மற்றும் குப்பன் (70) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஓட்டுநர் ரத்தினகுமார் (28) தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



மேலும் டீக்கடையில் அமர்ந்திருந்த தாராபுரத்தை அடுத்த நந்தவனம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (20), குப்பண்ணம் பாளையத்தை சேர்ந்த கோவிந்தசாமி (67), செல்லமணி (64) முத்துச்சாமி (60) சூரியநல்லூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (46) ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இச்சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான குண்டடம் போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...