நூற்பாலைகள், ஜவுளி தொழில் பாதிப்பு குறித்து தொழில் அமைப்புகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை!

தமிழக நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் குறித்து தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஜவுளி மற்றும் நூற்பாலை தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து கோவையை சேர்ந்த ஜவுளி தொழில் மற்றும் நூற்பாலை தொழில் அமைப்புகளுடன் தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,

1. ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தித்துறை சம்பந்தமான, குறிப்பாக மத்திய நிதி அமைச்சகம் சம்பந்தமான கோரிக்கைகளை, தரவுகளுடன், இந்த ஆண்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி நிலையையும் கணக்கில் கொண்டு, ஒரு நிதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அளிக்கலாம்.

2.மற்ற மாநில நூற்பாலைகள் மிக நவீன இயந்திரங்களை அந்தந்த அரசுக்களின் சலுகைகளை பயன்படுத்தி நிறுவி உள்ளதால், அவர்களது உற்பத்தி செலவு நம்மை விட குறைந்து உள்ளதால் நூல் ஏற்றுமதி சந்தையில் தமிழக நூற்பாலைகளால் போட்டியிட இயலாத நிலை உள்ளது.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் பயன்படுத்தும் அத்தகைய தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு தமிழக நூற்பாலைகளை தயார்படுத்தும் வகையில் சிறப்பு நிதி உதவித் திட்டத்தை தமிழக அரசு ஆலோசித்து செய்லபடுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...