பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தை ஜப்தி செய்த வந்த நீதிமன்ற ஊழியர்கள் - பரபரப்பு!

பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் செயல்பட்டு ஆவின் பால்பண்ணையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 17 ஊழியர்களுக்கு நீண்ட காலமாக அவர்களுக்கான விடுமுறைக்கான (அரியர்ஸ்) தொகை வழங்காமல் நிலுவையில் இருந்து வந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கடந்த ஆண்டு கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஊழியர்களுக்கு 90 நாட்களில் உரிய தொகையை வழங்க வேண்டும் என கடந்த அக்டோபரில் உத்தரவிட்டார். ஆனால், ஆவின் நிர்வாகம் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது.

இந்நிலையில், ஊழியர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின் பேரில், நீதிமன்ற அமீனா நாகராஜ், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஆவின் நிறுவனத்திற்கு நேரில் சென்று ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆவின் பால்பண்ணையில் உள்ள 30 கணினிகள், ஒரு இன்னோவா கார், ஜெனரேட்டர் உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆவின் நிர்வாக அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.47 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். இதனை தொடர்ந்து ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக கோவை ஆவினில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...