மணிப்பூர் விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் - வானதி சீனிவாசன் காட்டம்!

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மனித நாகரீகத்திற்கு எதிரானது என்றும் அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை: மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான செயல், அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோவை தெற்கு எம்.எல்.ஏ-வும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி இளைஞர்களுக்கு பணி நியமண ஆணையினை வழங்கினார்.



இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



CBSE மாணவர்களுக்கு பிராந்திய மொழி படிக்க இயலும் என்ற உத்தரவு நேற்று வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் அரசு பாஜக அரசு. மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல். அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மணிப்பூர் மாதிரியான பிராந்தியங்களில் அமைதியற்ற சூழலில் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அன்றாட சண்டை வந்தால் கூட பெண்களை வைத்து பிரச்சனை செய்யும் மனப்பாங்கு சமூகத்தில் மாற வேண்டும்.

அரசியலை தாண்டி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாஜக தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு அரணாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு வெளியே வரும்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி போல தேர்தல் சமயத்தில் இன்னும் பலர் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள். தேமுதிக உட்பட எந்த கட்சியையும் பாஜக உதாசீனப்படுத்தாது.

மணிப்பூர் வீடியோ சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்க கூடாது என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மணீப்பூருக்காக பேசும் காங்கிரஸ் கட்சி அக்கட்சி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளது. கட்சி வேறுபாடுயின்றி இந்தியாவில் எந்த பெண்ணிற்கு பாதிப்பு ஏற்படுமானால் பாஜக அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்.

நாட்டில் இருக்க கூடிய பல்வேறு கட்சியினர் பாஜகவினருடன் இணைய உள்ளார்கள். பாஜகவின் கூட்டணியை விரும்புபவர்களை தனி மனிதராக இருந்தாலும் சேர்த்து கொள்வோம்.

வேங்கைவயல் விவகாரத்தில் ஏன் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என கேள்வியெழுப்பியதுடன் சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கை வயல் போன்ற சம்பவங்கள் கரும்புள்ளி தான்.

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...