மணிப்பூர் கலவரம் - கோவையில் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த கோரி கோவையில் திமுக மகளிரணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவையில் திமுக மகளிரணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக கோவையில் திமுக மகளிர் அணி சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட திமுக கவுன்சிலர்கள், திமுக மகளிர் அணியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...