கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளின், பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாற்றுத்திறனாளிகளின், பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்நிகழ்வில் ஏழு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்களுடன் கூடிய வாகனங்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும், அடுத்த மாதம் 12ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...